அம்மன் கோயில் தேரோட்டம் : மாம்பழங்களை வீசி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
பொன்னமராவதி, உடையபிராட்டி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் நடைபெற்றது.
பொன்னமராவதி, உடையபிராட்டி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் நடைபெற்றது. இதில் 25 அடி உயர தேரில் சர்வ அலங்காரத்தில் அம்மன் வீற்றிருக்க கோவிலிலிருந்து புறப்பட்ட தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளில் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக தேரின் மீது மாம்பழங்களை வீசினர். பக்தர்கள் வீசிய மாம்பழங்களை பக்தர்கள் பக்தியுடன் எடுத்துச்சென்றனர்.