4 மாதங்களுக்குரிய தண்ணீரை தர வேண்டும் : காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பழ.நெடுமாறன் கோரிக்கை
காவிரியில் 9.19 டி.எம்.சி நீரை தமிழ்நாட்டிற்குத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதை வரவேற்பதாக பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
காவிரியில் 9.19 டி.எம்.சி நீரை தமிழ்நாட்டிற்குத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதை வரவேற்பதாக பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிப்ரவரி முதல் மே மாதம் வரை மாதந்தோறும் 2.5 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு அளிக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் எற்கனவே அளித்த உத்தரவை கர்நாடகம் நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். எனவே நான்கு மாதங்களுக்குரிய 10 டி.எம்.சி நீரை கர்நாடகம் அளிக்க ஆவன செய்ய வேண்டும் என்று பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.