சொத்துவரி ரசீது புத்தகம் வழங்க லஞ்சம் : மாநகராட்சி உதவி ஆணையாளர் உள்பட 2 பேர் கைது

கோவை கணபதி அருகே உள்ள நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார்,சொந்தமாக வீடு கட்டி வருகிறார்.

Update: 2019-05-27 19:29 GMT
கோவை கணபதி அருகே உள்ள நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார், சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் அந்த வீட்டிற்கு சொத்து வரி செலுத்துவதற்காக கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு மண்டல அலுவலகத்திற்கு சென்றுள்ளார். பலமுறை சென்றும், அவருக்கு சொத்துவரி ரசீது கிடைக்கவில்லை. தொடர்ந்து அவர் கோவை வடக்கு மண்டல உதவி ஆணையாளர் ரவிக்குமாரிடம் முறையிட்டுள்ளார். இதையடுத்து அவர் 15 ஆயிரம் லஞ்சம் கேட்டதால், இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அவர் புகார் அளித்தார்.  அவர்களது ஆலோசனையின் பேரில், ரசாயணம் தடவிய பணத்தை கொடுத்தபோது, ரவிக்குமார் மற்றும் இடைத்தரகர் பாலகிருஷ்ணன் ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். மேலும் இருவரது வீடுகளிலும் நடந்த சோதனையில் சில ஆவணங்களை போலீஸார் கைப்பற்றினர். தொடர்ந்து இருவரையும்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்