"கொத்தடிமையாக இருந்த கணவரை காணவில்லை" - பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரிடம் புகார்

ஆந்திராவில் கொத்தடிமையாக, பணியாற்றி வந்த கணவரை, மீட்டுத்தர கோரி பெண் ஒருவர், மதுரை மாவட்டம், திருமங்கலம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

Update: 2019-05-27 18:08 GMT
பாப்பநாயக்கன்பட்டி சேர்ந்த,  பாண்டியராஜன் என்பவர் தமது மனைவி முத்துமாரி, தமது 2 வயது மகளுடன் ஆந்திர மாநிலத்திற்கு  கடந்த 2014ஆம் ஆண்டு  சென்றுள்ளார். முறுக்கு தயாரிப்பு நிறுவனத்தில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த நிலையில், மனைவி முத்துமாரி அங்கிருந்து தப்பியுள்ளார். பின்னர், திருமங்கலம் வந்த முத்துமாரி, தமது கணவரிடம் இருந்து எந்த தகவலும் வராததால், காவல்துறையினரிடம்,புகார் அளித்துள்ளார். முத்துமாரி அளித்த புகாரில், தமது கணவனை கடந்த சில நாட்களாக காணவில்லை என்றும், மீட்டுதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்