5 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 5 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 5 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தூர் கிராமத்தை சேர்ந்த ரூபிணி, கருத்துவேறுபாடு காரணமாக தனது கணவர் பாண்டியனை பிரிந்து நான்கு ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். ஏற்கனவே மன ஊளச்சலில் இருந்த அவர், இன்று வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ரூபிணியின் உடலை மீட்ட நிலையில், சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனின் உடலை மீட்டனர்.