கோயிலில் நடைபெற்ற திருநங்கை திருமணம் : திருமணத்தை பதிவு செய்ய கோயில் நிர்வாகம் மறுப்பு
தூத்துக்குடி தாளமுத்துநகரை சேர்ந்த அருண்குமாரும், ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த திருநங்கை ஸ்ரீஜாவும், காதலித்து கடந்தாண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகரை சேர்ந்த அருண்குமாரும், ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த திருநங்கை ஸ்ரீஜாவும், காதலித்து கடந்தாண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். தூத்துக்குடி சிவன் கோவிலில் நடந்த இந்த திருமணத்தை பதிவு செய்ய முடியாது என கோவில் நிர்வாகம் மறுத்ததால், சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தம்பதியினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், திருநங்கை திருமணத்தை பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து தூத்துக்குடி பதிவாளர் அலுவலகத்தில் அருண்குமார், ஸ்ரீஜா திருமணம் பதிவு செய்யப்பட்டது. தமிழகத்திலேயே திருநங்கை திருமணம் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.