சிவகாசி : பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா
சிவகாசியில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழாவில் வினோத வழிபாடுகளுடன் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கயிறு குத்து திருவிழாவில், பக்தர்கள் தங்கள் உடம்பில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, மாறுவேடம் தரித்து, கையில் வேப்பிலை ஏந்தி கோயிலுக்கு சென்று வேப்பிலை படுக்கையில் உருண்டு விழுந்து வினோதமான முறையில் வழிபாடு நடத்தினர். வழிபாட்டின் போது பொங்கல் வைத்து, முளைப்பாரி, அக்னி சட்டி ஏந்தி, அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.