திருச்செந்தூர் கோவில் மயில் சிலை சேதம் : இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மீது வழக்கு பதிவு

திருச்செந்தூர் கோவிலின் மயில் சிலை சேதம் தொடர்பாக, அறநிலைய துணை இணை ஆணையர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-05-01 23:21 GMT
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மூலவருக்கு எதிரில் உள்ள மயில் சிலையை மாற்றி போலி சிலையை வைத்ததாக தகவல் பரவியது. இதனை தொடர்ந்து, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, போலி சிலையை அகற்றி விட்டு மீண்டும் உண்மையான மயில் சிலையை வைக்கும் போது அது சேதப்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, அது தொடர்பாக  இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, சூப்பிரண்டு பத்மநாதன், திருமேணி காவல் பணியாளர்கள் சுவாமிநாதன், ராஜகுமார் மற்றும் சுரேஷ் ஆகியோர் மீது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்