சுற்றுலா பயணிகளை கவர்ந்த பாரம்பரிய நடனங்கள் : கோடை விழாவை தொடங்கி வைத்தார், மாவட்ட ஆட்சியர்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை விழாவை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை விழாவை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். அரசு தாவரவியல் பூங்காவில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சண்முக பிரியா முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் வண்ணமிகு நடன நிகழ்ச்சிகள் அரங்கேறின. குறிப்பாக பரதநாட்டியம், கரகாட்டம் போன்ற கிராமிய நடனங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன. தொடர்ந்து தொட்டபெட்டா செல்லும் சாலையில் வண்ண மீன் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட அரிய வகை மீன்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை ஆர்வமுடம் சுற்றுலா பயணிகள் பார்த்துச் செல்கின்றனர்.