தகுதித்தேர்வு முடிக்காத ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு

தகுதித்தேர்வு முடிக்காத ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-05-01 19:30 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் பணியாற்றும் நான்கு ஆசிரியர்கள் தொடர்ந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், இவ்வாறு உத்தரவு பிறப்பித்ததுடன், வழக்கையும் தள்ளுபடி செய்தார். ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு 2 வாரங்களில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும், நோட்டீசுக்கு பதிலளிக்க 10 நாட்கள் அவகாசம் வழங்கி, அவர்களின் பதிலைப் பெற்று, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். ஏற்கனவே 8 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும், தகுதித் தேர்வு முடிக்காதவர்களுக்கு எந்த கருணையும் காட்ட முடியாது எனத் தெளிவுபடுத்திய நீதிபதி, பத்தாம் வகுப்பு தேர்ச்சியடையாத மாணவரை 11ம் வகுப்பில் சேர்க்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார். தகுதித் தேர்வு எழுதி 60 ஆயிரம் பேர் வேலைக்காக காத்திருக்கும் நிலையில், தகுதி தேர்வு எழுதாதவர்கள் பணியில் நீடிக்க அனுமதிப்பதில் எந்த காரணமும் இல்லை எனவும் நீதிபதி குறிப்பிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்