ஃபானி புயல் எதிரொலி : காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு
ஃபானி புயல் காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது.
ஃபானி புயல் காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது. வழக்கமாக மே மாத இறுதியில் தென்மேற்கு பருவக்காற்று வீசத்தொடங்கும் போது மின்சார உற்பத்தி அதிகரித்து காணப்படும். இந்நிலையில், தற்போது அதிகமான காற்று வீசியும், காற்றாலைகளில் 3 முதல் 4 மணி நேரம் வரையில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மே 25 ஆம் தேதிக்கு பிறகே காற்றலைகளில் மின்சார உற்பத்தி தீவிரமடையும் என்று கூறப்படுகிறது.