பாஜகவில் சேரப்போகிறேன் என்பது வடிகட்டிய பொய் - பன்னீர் செல்வம்

பாஜகவுக்கு தாம் செல்ல போவதாக அவதூறு பரப்பபட்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வேதனை தெரிவித்துள்ளார்

Update: 2019-05-01 17:27 GMT
பாஜகவுக்கு தாம் செல்ல போவதாக அவதூறு பரப்பபட்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வேதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தாம்  கட்சி மாறி வேறு கட்சிக்கு போக போவதாக வடிகட்டிய பொய்யை சிலர் வதந்திகளாக்கி  பரப்பி வருவதை நினைத்து மிகுந்த வேதனை அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.அதிமுகவில் ஒரு சாதாரண தொண்டனாக களப்பணியாற்றி பல ஆண்டுகள் பணிக்கு பின் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளராக உள்ளதாகவும் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.ஒருவரின் உழைப்பை, பெருமையை, கண்ணியத்தை பொய்யான எழுத்துக்களால் கறைபடுத்து விடலாம் என்று எண்ணுவோருக்கு மக்கள் சக்தியும், இறை சக்தியும் உரிய கூலி கொடுக்கும் என்றும்,தம் மீது பரபப்படும் அவதூறுகளை அதிமுக தொண்டர்களும், தமிழக மக்களும் செவி கொடுத்து ஏற்கமாட்டார்கள் என்றும் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்