இலவச பட்டாவை ஒப்படைக்க வந்த திருநங்கைகள்

விழுப்புரத்தில் முதல்வர் வழங்கிய இலவச பட்டாவை மாவட்ட ஆட்சியரிடம் திருநங்கைகள் ஒப்படைக்க வந்தததால் பரபரப்பு ஏற்பபட்டது

Update: 2019-04-29 11:31 GMT
விழுப்புரத்தில் முதல்வர் வழங்கிய இலவச பட்டாவை மாவட்ட ஆட்சியரிடம் திருநங்கைகள் ஒப்படைக்க வந்தததால் பரபரப்பு ஏற்பபட்டது.கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற MGR நுற்றாண்டு விழாவில், 217 திருநங்கைகளுக்கு இலவச பட்டாவை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். ஆனால், இதுவரை பட்டாவிற்கான நிலம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த திருநங்கைகள், மாவட்ட ஆட்சியரிடம் இலவச பட்டாவை ஒப்படைக்க வந்தனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததை அடுத்து, திருநங்கைகள் தங்களது கோரிக்கையை மனுவாக அளித்துவிட்டு திரும்பி சென்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்