கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் 90 % மாடுகள் விற்பனை
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் நடைபெறாமல் இருந்த, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை இன்று மீண்டும் நடைபெற்றது.
கடந்த வாரம் மொத்தமாக 400 மாடுகள் மட்டுமே விற்பனையானது. இன்று நடந்த சந்தையில் 400 பசுமாடுகள், 300 எருமை மாடுகள், 200 வளர்ப்பு கன்றுகள் என சந்தைக்கு வந்த 90 சதவீத மாடுகள் விற்பனை ஆனதாக விவசாயிகள் தெரிவித்தனர். இன்றைய சந்தையில் அண்டை மாவட்டங்கள் மட்டுமல்லாது அண்டை மாநில வியாபாரிகள், விவசாயிகளும் வந்ததால் வியாபாரம் களைகட்டியதாக வணிகர்கள் தெரிவித்தனர்.