ஏரியில் முகாமிட்ட காட்டு யானைகள் - நீண்ட போராட்டத்துக்கு பின் வனத்துக்குள் விரட்டி அடிப்பு
கெலவரப்பள்ளி ஏரியில் முகாமிட்டிருந்த 6 காட்டு யானைகள் நீண்ட போராட்டத்திற்கு பின் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது.
கெலவரப்பள்ளி ஏரியில் முகாமிட்டிருந்த 6 காட்டு யானைகள் நீண்ட போராட்டத்திற்கு பின் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது. ஒசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி அணையில் தஞ்சமடைந்த 6 காட்டுயானைகள் ஒன்றுக்கொன்று துதிக்கையாலும் தந்தத்தாலும் சண்டையிட்டு ஆனந்த குளியல் போட்டு நீராடி மகிழ்ந்தன. அங்கு வந்த வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் பேரண்டப்பள்ளி வனப்பகுதிக்குள் யானைகளை விரட்டினர். இதற்கிடையே காரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த முனிசீபப்பா என்பவரின் வாழை தோட்டத்தில் புகுந்த யானைகளால் வாழைகள் கடும் சேதமடைந்துள்லன. சுமார் 2 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பபட்டுள்ளதாகவும், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் முனிசீபப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.