"பொய்யான வாக்குறுதிகள் அளித்து வெற்றி பெற்றவர் பொன் ராதாகிருஷ்ணன்" - வசந்தகுமார் குற்றச்சாட்டு
கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச். வசந்தகுமார் இன்று காலை ஈத்தாமொழி சந்திப்பில் பிரசாரத்தை தொடங்கினார்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச். வசந்தகுமார் இன்று காலை ஈத்தாமொழி சந்திப்பில் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 ஆண்டுகளில் 300 நாளுக்கு மேல் நடந்த மக்களவை கூட்டத்தில் 7 நாட்கள் மட்டுமே பொன் ராதாகிருஷ்ணன் பங்கேற்றுள்ளதாக வசந்தகுமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை பொன். ராதாகிருஷ்ணன் அளித்து உள்ளதாகவும், மாவட்டத்தில் ரப்பர் தொழில் இடர்பாடுகளை சந்தித்து வருவதற்கு மோடி அரசின் தவறான கொள்கை தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். ராகுல்காந்தி ஆட்சிக்கு வந்ததும், ரப்பர் தொழிலுக்கு ஊக்குவிப்பு தரப்படும் என்றும் வசந்தகுமார் தெரிவித்தார்.