"குடிநீர் பிரச்சினையை தீர்க்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்" - கமீலா நாசர்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் கமீலா நாசர், எழும்பூர் பகுதியில் நடந்து சென்று பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் கமீலா நாசர், எழும்பூர் பகுதியில் நடந்து சென்று பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது என்றார். மத்திய சென்னை தொகுதியின் எம்பியாக தான் வெற்றி பெற்றால், குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் பிரச்சினையை தீர்ப்பதாகவும், மத்திய சென்னை தொகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மக்களும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.