"திமுக கூட்டணி விலை கொடுத்து வாங்கிய கூட்டணி அல்ல" - முத்தரசன்
திமுக கூட்டணி சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து, திருப்பூர் மாவட்டம் பெருமாள்நல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பிரச்சாரம் செய்தார்
திமுக கூட்டணி சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து, திருப்பூர் மாவட்டம் பெருமாள்நல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பிரச்சாரம் செய்தார். பொதுக்கூட்டத்தில் பேசிய முத்தரசன், திமுக தலைமையில் திரண்டுள்ள கட்சிகள் விலை கொடுத்து வாங்கியவை அல்ல என்றார். 2004 ஆம் ஆண்டை போலவே தற்போதும் திமுக வெற்றி பெறுவதற்கு சாதகமான அலைகள் வீசுவதாக முத்தரசன் தெரிவித்தார்.