பல கோடி மதிப்புள்ள பஞ்சலோக நரசிம்மர் சிலை பறிமுதல் : கடத்தல் சிலையா...? - தீவிர விசாரணை

பண்ருட்டி அருகே பறக்கும் படை வாகன சோதனையில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோகத்தால் ஆன நரசிம்மர் சிலை சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-04-03 09:23 GMT
கடலூர் மாவட்டம் கண்டரக்கோட்டை கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து வந்த  சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பஞ்சலோகத்தால் ஆன நரசிம்மர் சிலையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுபற்றி காரில் வந்த நபர்களிடம் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த பறக்கும் படை அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட சிலையை பறிமுதல் செய்து பண்ருட்டி தாசில்தார் கீதாவிடம் ஒப்படைத்தனர். இந்த சிலை சென்னையிலிருந்து கடத்தப்பட்டதா? இல்லை வேறு ஏதாவது காரணத்திற்காக கொண்டுசெல்லப்படுகிறதா? என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் இரண்டரை அடி உயரம், 70 கிலோ எடையில் மிக அற்புதமான கலை அம்சத்துடன் கூடிய இந்த நரசிம்மர் சிலையின் மதிப்பு பல கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்