"நல்லாட்சி தொடர வாக்களியுங்கள்"- ராஜேந்திர பாலாஜி பிரசாரம்
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமிக்கும், சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜவர்மனுக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வாக்கு சேகரித்தார்.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமிக்கும், சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜவர்மனுக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அமைச்சர், மத்தியில் நிலையான ஆட்சி அமையவும், மாநிலத்தில் நல்லாட்சி தொடரவும் வாக்களிக்க பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார். அப்போது பேசிய வேட்பாளர் ராஜவர்மன், கொத்தனார் வேலை பார்த்த தன்னை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேட்பாளராக நிறுத்தி இருப்பதாகக் குறிப்பிட்டார்.