தனியார் எண்ணெய் தொழிற்சாலையில் தீ விபத்து
ரூ.15 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
தேனி மாவட்டம் ரத்தினம் நகரில் உள்ள எண்ணெய் தொழிற்சாலையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.தொழிற்சாலையில் எண்ணெய் மற்றும் அட்டைகள் அதிகளவில் இருந்ததால் தீ மளமளவென பரவியது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த 40 க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர், தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.தொழிற்சாலையில் பணியாற்றிய 46 ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்ட நிலையில், இருவர் தீ காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.