இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு - பாட்டியாலா நீதிமன்ற விசாரணைக்கு தடை

தினகரன் மீதான வழக்கை பாட்டியாலா நீதிமன்றம் விசாரிக்க, டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-03-08 11:18 GMT
இரட்டை இலை சின்னத்தை தமது அணிக்கு சாதமாக மாற்ற,தேர்தல் ஆணையத்தில் உள்ள சில அதிகாரிகளுக்கு,லஞ்சம் தர முயன்றதாக  டிடிவி தினகரன் உள்ளிட்ட 9 பேர் மீது,டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.இதனையடுத்து, தம் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி தினகரன் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.இந்த வழக்கை  விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுணில் கவுர்,வரும் 20-ம் தேதி வரை தினகரன் உள்ளிட்ட ஒன்பது பேரையும் விசாரிக்கத் தடை விதித்துள்ளது.இதுபற்றி பதிலளிக்க டெல்லி போலீஸ் தரப்புக்கும் உத்தரவிட்டுள்ளார்.மேலும் இந்த வழக்கின் விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தும் உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்