கூலித் தொழிலாளி தலையில் கல்லைப் போட்டு கொலை : நண்பர்களுடன் விருந்து சாப்பிட்ட போது நடந்த சம்பவம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள பறக்கையை சேர்ந்தவர் நாகராஜன்.

Update: 2019-03-07 19:56 GMT
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள பறக்கையை சேர்ந்தவர் நாகராஜன். கூலித் தொழிலாளியான இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார்.  அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் நாகராஜன் தலையில் கல்லைத் தூக்கி போட்டு விட்டு 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாகராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்