எம்.எல்.ஏ., எம்.பி.-களுக்கான சிறப்பு நீதிமன்றம் : சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் விளக்கமளிக்க உத்தரவு

எந்த மாதிரியான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டது?

Update: 2019-03-07 19:49 GMT
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க. அரசுக்கு எதிராக முரசொலி நாளிதழில் கேள்வி - பதில் அறிக்கையை வெளியிட்டது தொடர்பாக அவர் மீதும், முரசொலி ஆசிரியர் செல்வம் மீதும் ,தமிழக அரசு  அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தது.இந்த வழக்குகள் எம் பி - எம் எல் ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.கருணாநிதி மரணமடைந்து விட்டதால்,  தன் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனவும்,   எம்.எல்.ஏ.வாகவோ, எம்.பி.யாகவோ இல்லாத  தன் மீதான  வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க முடியாது என செல்வம் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு நீதிமன்றம் எந்த மாதிரியான வழக்குகளை விசாரிக்கும் என்பது குறித்து விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்