பூஜை செய்யப்பட்ட 1 எலுமிச்சை பழம் 30,000 ரூபாய்...!

ஈரோடு அருகே பூஜை செய்யப்பட்ட ஒரு எலுமிச்சை பழத்தை 30 ஆயிரம் ரூபாய்க்கு பக்தர் ஒருவர் ஏலத்திற்கு எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Update: 2019-03-07 07:51 GMT
ஈரோடு அருகே பூஜை செய்யப்பட்ட ஒரு எலுமிச்சை பழத்தை 30 ஆயிரம் ரூபாய்க்கு பக்தர் ஒருவர் ஏலத்திற்கு எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈரோடு அருகே புது அண்ணாமலைபாளையம் பகுதியில் பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர‌ர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு மகா சிவராத்திரி 2 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். நேற்றைய தினம் பூஜைகள் நிறைவடைந்து, பூஜிக்கப்பட்ட பொருட்கள் ஏலம் விடப்பட்டன. சுவாமி நெற்றியில் வைக்கப்பட்ட 10 கிராம் வெள்ளிக்காசு 43 ஆயிரம் ரூபாய்க்கும், 10கிராம் வெள்ளி மோதிரம் 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. இது ஒருபுறம் இருக்க, அனைவரையும் ஆச்சர்யபடுத்தும் வகையில், பூஜிக்கப்பட்ட எலுமிச்சை பழத்திற்கு கடும் போட்டி நிலவியது. முடிவில் சக்திவேல் என்பவர் 30 ஆயிரம் ரூபாய்க்கு அதனை ஏலத்திற்கு எடுத்தார். இந்த விவகாரம்கிராம பக்தர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்