"ஊழலை பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதி கிடையாது" - ஸ்டாலின்
அண்ணா மற்றும் கருணாநிதியின் முழு உருவ சிலைகள் திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட திமுக சார்பில் திருக்கச்சி நம்பி தெருவில் பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதியின் முழு உருவ சிலைகள் திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், 5 ஆண்டு ஆட்சியில் லோக்பால் அமைப்பை பிரதமர் மோடி அமைக்காதது ஏன் என கேள்வி எழுப்பியவர், ஊழலை பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதி கிடையாது எனவும் கடுமையாக விமர்சித்தார்.