நாடாளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலையும் சேர்த்து நடத்திட வேண்டும் - தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஸ்டாலின் கடிதம்

நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டப் பேரவையில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையும் சேர்த்து நடத்திட வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2019-02-08 13:38 GMT
நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டப் பேரவையில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையும் சேர்த்து நடத்திட வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு  தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 18 சட்டமன்ற தொகுதிகளும் காலியானதாக 2017 செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால், தேர்தல் நடத்த, ஆணையம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அதில் ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த கடிதத்தை, தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையில், திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்