தமிழகத்தை விபத்தில்லா மாநிலம் ஆக்க அரசு முயற்சி - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
தமிழகத்தை விபத்தில்லா மாநிலம் ஆக்க அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் புதிய பகுதி நேர வட்டார போக்குவரத்து அலுவலகத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கூட்டாக திறந்து வைத்தனர். திறப்பு விழாவிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், தமிழகத்தை விபத்தில்லா மாநிலம் ஆக்க அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக கூறினார்.