கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை - ஈரோட்டில் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஈரோடு திரு.வி.க வீதியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை தி.மு.க. தலைவர் ஸ்டாவின் திறந்து வைத்தார்.

Update: 2019-01-30 18:50 GMT
ஈரோடு  திரு.வி.க வீதியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை தி.மு.க. தலைவர் ஸ்டாவின் திறந்து வைத்தார். மத்திய அரசின் அஞ்சல்துறை, கருணாநிதி உருவம் பொறிக்கப்பட்ட தபால் தலையை வெளியிட்டுள்ளது. அந்த தபால் தலையை  ஸ்டாலின் வெளியிட, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பெற்று கொண்டார். விழாவில் பேசிய அ​வர் , தி.மு.க. ஆட்சி வந்த , அடுத்த வினாடியே,  ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றும், உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்