டிஜிபிக்களை மாநில அரசு தங்கள் இஷ்டத்திற்கு நியமிக்க முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி

மாநில அரசுகள் டிஜிபிக்களை தங்கள் இஷ்டம் போல் நியமனம் செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Update: 2019-01-16 09:49 GMT
மாநில அரசுகள் டிஜிபிக்களை தங்கள் இஷ்டம் போல் நியமனம் செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் இது தொடர்பாக 2006ஆம் ஆண்டு பிரகாஷ் சிங் வழக்கில் கொடுத்துள்ள உத்தரவுகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது.

2006ஆம் ஆண்டு பிரகாஷ் சிங் வழக்கில் டிஜிபி நியமனம் தொடர்பாக சில வழிமுறைகளை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி,  மத்திய பணியாளர் தேர்வாணையம் தான் டிஜிபிக்களை நியமிக்க வேண்டும் என்று அதில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், காவல்துறையானது மாநில அதிகார வரம்புக்குள் வருவதால், தாங்களே டிஜிபிக்களை நியமனம் செய்துகொள்ள அனுமதிக்க்க கோரி மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில அரசுகள், உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாநில அரசுகள் டிஜிபிக்களை தன்னிச்சையாக நியமனம் செய்யக் கூடாது என்றும்  2006ஆம் ஆண்டு பிரகாஷ் சிங் வழக்கில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும்  மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்