காஞ்சிபுரம் : குடும்பத்தகராறில் 2 குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்

காஞ்சிபுரம் அருகே குடும்பத் தகராறில் 2 குழந்தைகளை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற தாய் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2019-01-15 02:40 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி நஸ்ரின். இவர்களுக்கு 3 வயதில் சபீர் என்ற மகனும், 2 வயதில் நசிதா என்ற மகளும் இருந்தனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பிரச்சினை அதிகரிக்கவே நஸ்ரின் தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்று தீவைத்துக் கொண்டார். இதில் குழந்தைகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நஸ்ரினை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்