ரெயிலில் பாய்ந்து குழந்தையுடன் 3 பேர் தற்கொலை
குடும்ப தகராறு காரணமாக மனம் உடைந்த 30 வயது பெண் ஒருவர் தனது குழந்தையுடன் , ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே உள்ள நெல்வாய் என்ற கிராமத்தை சேர்ந்த கார் டிரைவர் தனசேகர் என்பவரின் மனைவி ஜெயந்தி, தனது பெரிய மாமனார் 54 வயது கோபால கிருஷ்ணன், தனது குழந்தைகள் மகாலட்சுமி, ஸ்ரீ லட்சுமி ஆகியோருடன் கடந்த 27 ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார்.
வேளாங்கண்ணிக்கு சென்ற ஜெயந்தி, அங்குள்ள விடுதியில் தனது மூத்த மகள் மகாலட்சுமியை கொலை செய்து, அறைக்குள் பூட்டி வைத்து விட்டு, விஜயவாடா சென்று ரெயிலில் பாய்ந்து மூவரும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெற்ற குழந்தையை கொலை செய்து விட்டு, 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்வாய் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.