பொருளாதாரத்தில் பின்தங்கிய 3,200 பேருக்கு இலவச உயர்கல்வி
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மாவட்டம் தோறும் பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவர்களை அடையாளம் காணும் பணியில் முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையிலான குழு ஈடுபட்டுள்ளது. மாவட்டத்திற்கு 100 மாணவர்கள் வீதம் 3 ஆயிரத்து 200 பேரை தேர்வு செய்து, தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம், அவர்களுக்கு இலவச உயர்கல்வி அளிக்கப்பட உள்ளது.