அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - சுவரொட்டியால் பரபரப்பு...

புகழ்ப்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தனி ஒரு சங்கத்திற்கு அனுமதி வழங்க கூடாது என்று கூறி மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2018-12-30 07:06 GMT
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம்  அவனியாபுரத்தில் வரும் ஜனவரி 15 ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை செங்கால் பாசன விவசாயிகள் சங்கம் என்ற அமைப்பு நடத்தி வருகிறது. இந்நிலையில், பரிசு மற்றும் பண வசூலில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்ததால், அவனியாபுரம் அனைத்து சமுதாய மக்கள் விழா குழு அமைக்கப்பட்டு, அந்த அமைப்புக்கு போட்டி நடத்த அனுமதிக்குமாறு மதுரை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ளது. இந்நிலையில், இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் 3 ந்தேதி அறிக்கை அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. 3 கட்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இன்று 4-வது கட்ட பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. இதற்கிடையே, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தனி ஒரு சங்கத்திற்கு அனுமதி வழங்க கூடாது என கூறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால், ஜல்லிக்கட்டு நடைபெறுவதில் சிக்கல் ஏற்படுமோ என பொதுமக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்