சட்டவிரோத மது விற்பனையை போலீசார் தடுக்கவில்லை -போலீசாரை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் கையறுப்பு

சட்டவிரோத மது விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கோவையில் இளைஞர் கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2018-12-27 11:52 GMT
சட்டவிரோத மது விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கோவையில் இளைஞர் கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தாம் வசிக்கும் சாய்பாபா காலனி பகுதியில் சட்டவிரோத மது விற்பனை களைகட்டுவதாக போலீசில் புகாரளித்துள்ளார். இருமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அவர், ஆட்சியர் அலுவலகத்தில் ரத்தம் சொட்ட சொட்ட கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Tags:    

மேலும் செய்திகள்