கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம்: ஜன.3க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரத்தை, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

Update: 2018-12-27 08:44 GMT
வழக்கறிஞர்கள் ஜார்ஜ் வில்லியம்ஸ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வு முன்பு ஆகியோர் ஆஜராகி, சாத்தூர் சம்பவம் குறித்து முறையிட்டனர்.  இது சம்பந்தமாக தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். இதற்கு பதிலளித்த தமிழக அரசு  கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை, நீதிமன்றம் திறந்த பிறகு தாக்கல் செய்வதாக தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்