ஆதிநாதன் கோயிலில் திருமங்கை ஆழ்வார் வேடுபறி உற்சவம்

ஆதிநாதன் கோயிலில் திருமங்கை ஆழ்வார் வேடுபறி உற்சவம்

Update: 2018-12-27 02:50 GMT
நெல்லை மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் கோவிலில் திருமங்கை ஆழ்வார் வேடுபறி உற்சவம் கோலகலமாக நடைபெற்றது. இதில் சுவாமி தங்க குதிரை வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட தங்க, வைர ஆபரணங்கள் அணிந்து நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்தார். அப்போது  திருடர் வேடமணிந்த படையுடன் வந்த திருமங்கை ஆழ்வார், சுவாமியின் நகைகளை திருடி செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் திருமங்கை ஆழ்வார் மணம் திருந்தி திருடிய நகைகளை திருப்பி ஒப்படைக்கும் நிகழ்ச்சியும் இடம் பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்