தேவையான இடத்தில் செயற்கை மழையை வரவழைக்க டிரோன் : 11-ம் வகுப்பு மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு

திருப்பூர் அருகே செயற்கை மழையை வரவழைக்க தனியார் பள்ளி மாணவன் உருவாக்கியுள்ள டிரோன் பலரையும் ஈர்த்துள்ளது

Update: 2018-12-21 14:50 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலை 11-ம் வகுப்பு மாணவன் ஒருவர் செயற்கை மழையை வரவழைக்கும் டிரோன் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதன் மூலம், ஒரே இடத்தில் பெய்யும் மழையை பரவச் செய்தும், பெய்யும் மழையை நிறுத்தவும் முடியும் என மாணவன் திருவருள்செல்வன் கூறுகிறார். புவி வெப்பமடைதல், வன விலங்குகளின் எண்ணிக்கை குறைதல் ஆகியவைகள் குறித்தும் ஆராய்ச்சி செய்துவரும் இவர், அரசின் பொருளுதவி இருந்ததால், நாட்டுக்கு பயன்தரும் கண்டுபிடிப்புகளை வழங்க ஏதுவாக இருக்கும் என்கிறார். இந்த இளம் விஞ்ஞானியின் முயற்சிக்கு   பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்