தண்ணீரின்றி தவித்த கிராம மக்கள் சாலை மறியல்
நாகை மாவட்டம் பொட்டவெளி கிராமத்தில் தண்ணீரின்றி தவித்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் பொட்டவெளி கிராமத்தில் தண்ணீரின்றி தவித்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவிழந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொட்டவெளி கிராமத்தில், போர்வெல் பழுது காரணமாக கடந்த ஒன்றரை மாதமாக குழாய்களில் தண்ணீர் வரவில்லை. இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராகவன் நிரந்தர குடிநீர் வசதி செய்து தரப்படும் என்று உறுதியளித்த பின், போராட்டம் கைவிடப்பட்டது.