நித்தியானந்தாவுக்கு நீதிபதி கடும் கண்டனம்
பெண் சீடர் ஆர்த்திராவ் தொடர்ந்த பாலியல் பலாத்கார வழக்கில் சுவாமி நித்தியானந்தா விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என்று பிடதி நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
வழக்கு நீதிபதி கோபால் ராய் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுவாமி நித்தியானந்தா ஆஜர் ஆகவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, வருகிற ஜனவரி 3 ம் தேதி சுவாமி நித்தியானந்தா ஆஜர் ஆகாவிட்டால் ஜாமீனில் வெளி வர முடியாத வகையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்தார்.