பழுது காரணமாக மலை ரயில் தாமதம்
பழுது காரணமாக மலை ரயில் தாமதம் சுற்றுலா பயணிகள் அவதி
நீலகிரி மாவட்டம், குன்னூர் மலை ரயில் தாமதமாக இயக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.
மேட்டுப்பாளையம் முதல் குன்னுார் வரை இயக்கப்படும் இந்த ரயிலின் நீராவி என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் மலை ரயில் சுமார் ஒரு மணிநேரம் தாமதமாக குன்னூரை வந்தடைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.