கோரல் ஸ்டார் கப்பலில் இருந்து 20 டன் கச்சா எண்ணெய் கழிவுகள் அகற்றம் - கடலோர காவல் படை

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கடந்த 5 நாளில் கோரல் ஸ்டார் கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் கழிவுகளில் 20 டன்கள் அகற்றப்பட்டு உள்ளதாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

Update: 2018-12-18 07:57 GMT
கடந்த 18 ஆம் தேதி கொச்சியில் இருந்து சென்னை எண்ணூர் துறைமுகம் வந்த கோரல் ஸ்டார் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து எண்ணூர் துறைமுகத்தில் உள்ள கழிவுகளை அகற்றும் பணி ஐந்து நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதுவ​ரை 20 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும்,  இன்னும் ஏராளமான எண்ணெய் கழிவுகள் கடல் அடியில் தேங்கி உள்ளது என்றும் கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. இந்த எண்ணெய் கழிவுகளால், கடல்வாழ் உயிரினங்களுக்கு  பெரும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் கடலோர காவல் படை சுட்டிக்காட்டி உள்ளது. இதனிடையே 4 புள்ளி 37 கோடி ரூபாய் அபராதம் விதித்ததை எதிர்த்து கோரல் ஸ்டார்  கப்பல் நிறுவனம் நீதிமன்றம் சென்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்