"தஞ்சை பெரிய கோயிலில் பஜனை நிகழ்ச்சிக்கு யார் அனுமதி கோரினாலும் அனுமதியா?" - உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

தஞ்சை பெரிய கோயிலில், யார் பஜனை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரினாலும் அனுமதி அளிப்பீர்களா என தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Update: 2018-12-13 11:12 GMT
வாழும் கலை அமைப்பு நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், தஞ்சை பெரிய கோவிலில் 3 நாட்கள் யோகா மற்றும் தியான நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கியது தொடர்பான வழக்கு மீண்டும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது.  இதற்காக தஞ்சை பெரிய கோயில் பெரிய பந்தல் அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் தொல்லியல் துறை கண்காணிப்பு பொறியாளர் சுப்பிரமணி, கோவில் இணை ஆணையர் பரணிதரன் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

வாழும் கலை அமைப்பினருக்கு  கோயிலில் பஜனை நிகழ்ச்சி நடத்த மட்டுமே அனுமதி வழங்கினோம் என்றும், கோயில் நிர்வாகம் பரிந்துரை செய்தது என்றும் சுப்பிரமணி தெரிவித்தார். நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தின் முழு வரைப்படத்தை பெற்ற பின்பு தான் அனுமதி வழங்கப்பட்டதா? என்றும், யார் பஜனை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரினாலும் அனுமதி அளிப்பீர்களா? என்றும் நீதிபதிகள் அப்போது கேள்வி எழுப்பினர். 

பெரிய கோயிலின் பழமையை பாதுகாக்கவே தலையிடுவதாகவும்,  தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக தொல்லியல் துறை மற்றும் கோவில் நிர்வாகத்திற்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறிய நீதிபதிகள்,  விசாரனையை வரும் 20 ம் தேதிக்கு  ஒத்திவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்