தமிழக மீனவர்களுக்கு ஜிபிஎஸ் கருவி - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

ஆழ்கடலில் சென்று மீன் பிடிப்பவர்களை தொடர்பு கொள்ள ஜிபிஎஸ் மற்றும் 'நேவிக்' கருவிகள் வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-12-06 10:49 GMT
* இது தொடர்பான அரசாணையில், மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 3 புள்ளி 40 கோடி ரூபாய் செலவில் 181 சாட்டிலைட் போன்கள், 240 'நேவிக்' கருவிகள், 160 'நேவ்டெக்' கருவிகள் வாங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* இதற்காக பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டு, 20 லட்சம் ரூபாய் செலவில் முதற்கட்டமாக 21 யூனிட் சேட்டிலைட் போன்கள் வாங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கருவிகள் தமிழகத்தில் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்லும் ஆயிரத்து 500 படகுகளுக்கு வழங்கப்படும் எனவும் 15 முதல் 20 படகுகள் கொண்ட  ஒரு குழுவிற்கு 2 சேட்டிலைட் போன்கள், மூன்று நேவிக் மற்றும் இரண்டு நேவ்டெக்ஸ் கருவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. 

* இதன்மூலம் பேரிடர் காலங்களில் முன்கூட்டியே ஆழ்கடல் சென்ற மீனவர்களுக்கு எச்சரிக்கை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்