மேகதாது விவகாரம் - அதிமுக எம்பிக்களுடன் முதல்வர் ஆலோசனை

மேகதாது அணை தொடர்பாக அதிமுக எம்பிக்களுடன் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

Update: 2018-12-06 07:15 GMT
மேகதாது அணை தொடர்பாக அதிமுக எம்பிக்களுடன் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். சென்னை - ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சரும், ஒருங்கிணைப்பாளருமான பன்னீர் செல்வம், மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஜெயலலிதா இருந்தபோதும், இப்போதும் தமிழக நலன்களுக்காக குரல் கொடுக்கும் அதிமுக எம்பிக்களின் செயல்பாடுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்தார். காவிரி விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டது போல, மேகதாது விவகாரத்திலும், நாடே திரும்பி பார்க்கும் வகையில், நாடாளுமன்றத்தில் ஒங்கி, குரல் கொடுக்குமாறு, எம்பிக்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்