சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் தீர்ப்பு அளிக்கிறது
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அரசாணை பிறப்பித்தது. அதனை ரத்து செய்து உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அவற்றை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழக அரசின் அரசாணைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கிடையே, ஐ.ஜி, பொன்.மாணிக்கவேல், இன்று ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.