நீதிமன்ற அனுமதியின்றி பொன்.மாணிக்கவேல் மீது நடவடிக்கை கூடாது - உயர்நீதிமன்றம்

உயர் நீதிமன்ற அனுமதியின்றி ஐஜி பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2018-11-26 11:10 GMT
சிலை கடத்தல் வழக்குகளில் முன்ஜாமீன் கோரி முத்தையா ஸ்தபதி, இந்து சமய அறநிலையத்துறை  கூடுதல் ஆணையர் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல், இன்னும் 4 நாட்களில் பணி ஓய்வு பெற உள்ள உள்ள தனக்கு எதிராக சிபிசிஐடி பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாகவும், ஓய்வு பெறுவதற்கு முன் தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சதி நடப்பதாகவும் குற்றம் சாட்டினார். 

இதையடுத்து, நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் ஐஜி பொன்.மாணிக்கவேல்  உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என தமிழக அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் முன்ஜாமீன் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்