எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு - அதிமுகவினர் மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே எம்.ஜி.ஆர். சிலையின் கைப்பகுதியை மர்ம நபர்கள் நேற்றிரவு உடைத்துள்ளனர்.

Update: 2018-11-26 10:08 GMT
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள கொருக்கத்தூர் கிராமத்தில் எம்.ஜி.ஆர். சிலையின் கைப்பகுதியை மர்ம நபர்கள் நேற்றிரவு உடைத்துள்ளனர். மேலும், அருகில் உள்ள கொடிக் 
கம்பத்தில் இருந்த அதிமுக கொடியையும் எரித்துள்ளனர். அதை இன்று காலையில் பார்த்த அதிமுகவினர் அதிர்ச்சியடைந்ததோடு, சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக 
மறியல் நீடித்ததால் கலவை - வாழப்பந்தல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் செய்யாறு டிஎஸ்பி குணசேகரன் வட்டாட்சியர் மகேந்திரன் ஆகியோர் சமரசம் 
பேசி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்