அறுபடை வீடுகளில் சிறப்பிடம் பெற்ற பழனி முருகன் கோயிலின் சிறப்புகள்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடான பழனி கோயில் கோயிலின் சிறப்புகள்.

Update: 2018-11-10 13:16 GMT
* அறுபடை வீடுகளில் தனித்துவம்  பெற்ற தலமாக காட்சி தருகிறது பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில். மற்ற ஸ்தலங்களில் அலங்கார நாயகனாக காட்சி தரும் முருகப்பெருமான் இத்தலத்தில் குழந்தை வேலாயுதராக பக்தர்களின் மனதை கொள்ளை கொள்கிறார்.... 

* நாரதர் கொடுத்த கனியை தனக்கு கொடுக்காததால் கோபித்துக் கொண்டு குடியேறிய தலம் இது என்கிறது வரலாறு. தாய் பார்வதி பலமுறை அழைத்தும் திரும்பி வராமல் பிடிவாதமாக முருகப்பெருமான் இங்கேயே தங்கியுள்ளார்... 

* இந்த கோயிலில் உள்ள மூலவர் சிலை நவபாஷாணத்தால் ஆனது. போகர்  என்ற சித்தர் 9 வருடங்களாக இந்த சிலையை வடிவமைத்து பிரதிஷ்டை செய்துள்ளார். மற்ற கோயில்களில் இருப்பதை காட்டிலும் பழனி கோயில் நவபாஷாண சிலைக்கு பெருமைகள் பல இருக்கிறது.. 

* 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகைகளை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நவபாஷாண சிலை மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இந்த சிலையில் இருந்து வெளிப்படும் நீரை எடுத்து அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள். இதனால் தீராத நோய்களும் தீரும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே இருக்கிறது... 

* இங்கு இருக்கும் சுவாமிக்கு பஞ்சாமிர்தம், விபூதி, நல்லெண்ணெய், சந்தனம் ஆகிய பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆறு கால பூஜையின் போதும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடப்பது பழனி கோயிலில் பிரசித்தம்.,.. 

* திருப்பதி லட்டு போல இந்த கோயிலில் செய்யப்படும் பஞ்சாமிர்தமும் உலகப்புகழ் பெற்ற ஒன்றாக இருக்கிறது... உடலுக்கு ஆரோக்யம் தரும் வகையிலான பொருட்களை ஒன்று சேர்த்து செய்யப்படும் இந்த பஞ்சாமிர்தம் ருசியிலும் சரி, ஆரோக்யத்திலும் சரி தனித்து நிற்கிறது... 

* கந்த சஷ்டி விழாவின்  போது பழனி  கோயில் விழாக் கோலமாகவே காட்சி தருகிறது. பல பகுதிகளில் இருந்து இங்கு வரும் பக்தர்கள் 6 நாட்கள் தங்கியிருந்து விரதம் மேற்கொள்கின்றனர். இதனால் தாங்கள் நினைத்த காரியம் கைகூடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே இருக்கிறது...

* கோயிலுக்கு வரும் பக்தர்கள் கிரிவலம் செல்லும் வழக்கத்தையும் பின்பற்றுகின்றனர். மலை மீது வீற்றிருக்கும் முருகனை தரிசிக்க 690 படிகளை கடந்து செல்ல வேண்டும். அதேநேரம் படியில் ஏற முடியாதவர்களுக்கு ரோப் கார் வசதிகளும் செய்யப்பட்டிருக்கிறது... 

* விழா காலங்களின் போது கந்தனுக்கு காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். தைப்பூசத்தின் போது தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து மாலை அணிவித்து விரதம் இருந்து கோயிலுக்கு நடந்தே வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்... 

* திருமணத் தடை, நோய் நொடிகளை நீக்கி பக்தர்களுக்கு நற்பேறு வழங்கும் தெய்வமாக காட்சி தருகிறார் பழனி தண்டாயுதபாணி.


Tags:    

மேலும் செய்திகள்