ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு - வீரர்கள் கண்ணீர் அஞ்சலி...
திருச்சியில் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்துள்ள சம்பவம், அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணிகண்டம் கிராமத்தில் வசித்து வரும் பழனியாண்டி என்பவரது செவலை என்ற காளை, பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த அந்த காளை இன்று உயிரிழந்தது. இதை அறிந்த பொதுமக்களும், ஜல்லிக்கட்டு வீரர்களும் காளைக்கு தங்கள் இறுதி மரியாதையை செலுத்தினர்.